அண்ணாமலை ஜியுடன் ஒத்தக்கி ஒத்த.. உதயநிதிக்கு தில் இருக்கா..?? சவால் விட்ட அமர் பிரசாத் ரெட்டி.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 5:55 PM IST
Highlights

யார் திறமையானவர்கள் என்பது குறித்து அண்ணாமலையுடன் ஒற்றைக்கு ஒற்றையாக நேரில் விவாதிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு துணிவிருக்கிறதா என அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் திறமையானவர்கள் என்பது குறித்து அண்ணாமலையுடன் ஒற்றைக்கு ஒற்றையாக நேரில் விவாதிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு துணிவிருக்கிறதா என அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முழுக்க முழுக்க மக்கள் தலைவராக மாறி உள்ளார். அவரது அர்ப்பணிப்பு சாதாரணமானது அல்ல என்றும் அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி ஒவ்வொரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அல்லாடி வருகின்றனர்.

அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜகவை தனித்துவமிக்க கட்சியாக உருவாக வேண்டும் என்பதில் அண்ணாமலை  தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில்தான் மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு  வீசப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்ணாமலை தான் செருப்பு வீச்சுக்க காரணம் என்ற குற்றச்சாட்டை திமுகவினர் முன்வைத்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் பிடிஆருக்கும் அண்ணாமலைக்கும் இடையே  வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் துரதிஷ்டம் அண்ணாமலை என்று பிடிஆரும், எனது கால் செருப்பு கூட  டிடிஆர்  ஈடாக மாட்டார் என அண்ணாமலையில் மாறி மாறி பேசியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: நடைபயணம் ராகுல் காந்தி உடம்புக்கு நல்லது.. மக்களுக்கு ஒரு நம்மையும் இல்லை.. பங்கமாய் கலாய்த்த சீமான்.

இது இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் முரசொலியில் அண்ணாமலையை தனியாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது, அண்ணாமலை ஒரு தற்குறி என்றும், அரசியலை சாக்கடை ஆக்கிய அதில் உழல துடிக்கிறார் என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தான். அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக  இளைஞர் அணி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக, திமுக என்பது சாதாரண ஒரு மாநிலக் கட்சி, 10 கூட்டணி  கட்சிகளின் உதவியுடன் தொங்கிக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு குடும்பக் காட்சி, ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே தளபதி இளைய தளபதி போன்ற இடங்களுக்கு வர முடிகிறது.

அந்தக் கட்சியில் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களே இதை எண்ணி மனக்குமுறலில் உள்ளனர். ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அதிகாரம் பொறுப்பு கிடைக்கும், அண்ணாமலை நாளுக்கு நாள் மக்கள் தலைவராக மாறி வருகிறார், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார் அவர், அறுபணிப்பு சாதாரணமானது அல்ல, யார் சிறந்தவர்கள் திறமையானவர்கள் என்பது குறித்த நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.

இதையும் படியுங்கள்:  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் யார்.. சபாநாயகர் அப்பாவு சொன்ன பரபரப்பு தகவல்.

இதுகுறித்து எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் நேருக்கு ஒத்தைக்கு ஒத்தை விவாதிக்கத் உதயநிதி தயாரா? பாஜகவை என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவீர்கள், செய்வீர்கள் நாங்கள் எதிர்வினையாற்ற கூடாதா? மக்களுக்காக பேசக்கூடாதா? மக்களுக்காக போராட கூடாதா? பாஜக கட்சி எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறது, இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை, திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை, மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த கட்சியின் ஆட்சியே இனி வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒருத்தர் கூட நிம்மதியாக வீடு கட்ட முடியவில்லை, வீடு கட்டினால் அங்கு போய் அந்தப் பகுதியில் இருக்கும் திமுகவினர் எவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள், வசூல் செய்கிறார்கள், சாதாரண ஒரு இட்லி கடை கூட திமுகவினர் விட்டுவைப்பதில்லை, எல்லாவற்றிலும் பணம் வசூல் நடக்கிறது. இவ்வாறு அமர் பிரசாத் கூறியுள்ளார். 
 

click me!