நடைபயணம் ராகுல் காந்தி உடம்புக்கு நல்லது.. மக்களுக்கு ஒரு நம்மையும் இல்லை.. பங்கமாய் கலாய்த்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 4:47 PM IST
Highlights

திராவிட மாடல் என்பதைவிட தமிழ்நாடு மாடல் என்று கூறினால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் என்பதைவிட தமிழ்நாடு மாடல் என்று கூறினால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அனைவரும் மாடலாக தான் இருக்கிறார்கள் ஆனால் ஆட்சி செய்யவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் அங்கு தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தி நேத்திக்கடன் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:- கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பெயரளவிலேயே இருக்கிறது,  அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தமிழிக அரசு அறிவித்தது, ஆனால் அது நடைமுறையில் இல்லை என விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்:   முரசொலி ஒரு டாய்லெட் பேப்பர்... திமுகவை வச்சு செய்த அமர் பிரசாத் ரெட்டி.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கூறினார், ஆனால் அதுவும் நடைமுறையில் இல்லை,  முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது, பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, இன்றளவும் ஜனாதிபதியின் கையெழுத்துக்காக என் இனமே காத்திருப்பது வேதனை அளிக்கிறது என்றார். திராவிட மாடல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்பதைவிட தமிழ் மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்றார்.

இதையும் படியுங்கள்: மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவது இலவசம் இல்லை.. அது அரசின் கடமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அனைவரும் மாடலாகத் தான் இருக்கிறார்கள் ஆனால் ஆட்சிதான் செய்யவில்லை என்றார், கன்னியாகுமரியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் தொடங்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் நல்லது, அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், ஆனால் மக்களுக்கு ஒன்றுமில்லை என்றார்.

கஞ்சா குட்கா உள்ளிட்டவை போதைப் பொருட்கள் தான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால்  மதுபானம் என்ன நாழிக் கிணற்றில் தீர்த்தமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக இருக்கிறது என கோரி மாதம் குடும்பத் தலைவருக்கு  1000 தர முடியாது என தெரிவித்துள்ள தமிழக அரசு, தற்போது மாணவிகளுக்கு மட்டும் 1000 கொடுத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தற்போது மாநில நிதி மிகுந்த வலிமை பெற்று விட்டதா என்றும் அவர் விமர்சித்தார். 
 

click me!