போலீஸ் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? எல்லை மீறிய சி.வி சண்முகம்.. லுங்கியுடன் கைதாவாய்.. எச்சரித்த புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2022, 6:25 PM IST
Highlights

சிவி சண்முகம் பேசும்போது தன்மையுடன் பேச வேண்டும் இல்லை என்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டி வரும் என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார்.

சிவி சண்முகம் பேசும்போது தன்மையுடன் பேச வேண்டும் இல்லை என்றால் லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டி வரும் என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் காவல் துறையே அவமதிக்கும் வகையில் பேசி வரும் நிலையில்  புகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

அதிமுகவில் அதிகாரப் போட்டி நடந்து வருகிறது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், அதுகுறித்து கருத்து தெரிவித்த சி.வி சண்முகம், ஓபிஎஸ்சுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கு ஒரு கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:   அண்ணாமலை ஜியுடன் ஒத்தக்கி ஒத்த.. உதயநிதிக்கு தில் இருக்கா..?? சவால் விட்ட அமர் பிரசாத் ரெட்டி.

அதுமட்டுமின்றி சசிகலா  தரப்பினரை மிக இழிவாகவும் அவர் பேசி வருகிறார், மேலும் காவல் துறை கோபால புரத்தில் மாவாட்டுகிறதா என்றும், காவல்துறை ஸ்டாலின் வீட்டின் ஏவல் துறையாக உள்ளது என்றும் பேசி வருகிறார். இந்நிலையில்தான்  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சி.வி சண்முகம் காவல்துறையை மிகக்கடுமையாக இழிவாக பேசியிருந்தார், காவல்துறை கோபாலபுரத்தில் மாவாட்டிக் கொண்டிருக்கிறதா என்கிறார். 

இதையும் படியுங்கள்: சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் யார்.. சபாநாயகர் அப்பாவு சொன்ன பரபரப்பு தகவல்.

சி.வி சண்முகம் போன்றவர்களுக்கு திடீரென ஜானகி அம்மா நியாபகம் வந்துள்ளது, உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது, மக்கள் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள், செய்தியாளர்களை சந்திக்கும் போது, சிவி சண்முகம்  தன்மையோடு பேச வேண்டும், இல்லையென்றால்  லுங்கியுடன் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வரும்,  எடப்பாடி பழனிச்சாமி  இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிக்கிறார்.

தற்போது வந்துள்ள தீர்ப்பு சாதகமாகத்தான் வந்துள்ளது, ஒருவேளை அதிமுகவில் சின்னம் மற்றும் கட்சி முடக்கப்பட்டால், அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி இப்போது வந்தாலும் ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வார், முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழக டிஜிபி யை மாவட்டுகிறார் என கூறியதை தமிழக முதல்வர் கேட்டு அமைதியாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு பெங்களூர் புகழேந்தி கூறினார். 
 

click me!