உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்... அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்!!

Published : Sep 05, 2022, 08:15 PM IST
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்... அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்!!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதகரமாகியுள்ளது. மேலும் ஒற்றை தலைமை  விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, இருவரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: போலீஸ் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறதா? எல்லை மீறிய சி.வி சண்முகம்.. லுங்கியுடன் கைதாவாய்.. எச்சரித்த புகழேந்தி.

இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக.17 ஆம் தேதி, வழக்ககை விசாரித்த தனி நீதிபதி, 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை இருநபர் அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: சசி-பன்னீர் திட்டத்தில் மண்ணைப் போட்ட ஐகோர்ட்.. வருவதாக சொன்ன 30 தலைகள் ஜகா.. களமிறங்கிய இபிஎஸ்.

இதில் இன்று அறிவித்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவினை ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு நீதிபதிகளும்  தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து ஓபன்னீர்செல்வம் மேல்முறையீடு தொடரவிருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!