ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் கூடியது – திரிசங்கு நிலையில் இருந்த அருண்குமார் ஓ.பி.எஸ்ஸிடம் ஐக்கியம்...

First Published Mar 8, 2017, 10:03 PM IST
Highlights
Opies support is the strength of MLAs - fellowship with opies Arun Kumar in limbo


கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைக்கபட்டிருந்த எம்.எல்.ஏக்களில் ஒரு எம்.எல்,ஏ எஸ்கேப் ஆனதால் 121 ஆக எண்ணிக்கை குறைந்து போனது.

சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ கோவை வடக்கு தொகுதியை சேர்ந்த அருண்குமார் ஆவார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற அன்றுதான் ரிசார்ட்டில் இருந்து தப்பித்து சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றார்.

அதனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் எடப்பாடிக்கும் ஆதரவு இல்லை , ஓ.பி.எஸ்ஸுக்கும் அதரவு இல்லை என்ற நிலையில் புறக்கணித்து வீட்டிலேயே இருந்து விட்டார்.

இதனால் அருண்குமார் எம்.எல்.ஏவின் ஆதரவு யாருக்கு என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஓ.பி.எஸ் அறிவித்திருந்த உண்ணாவிரத போராட்டத்தில் திடீரென அருண்குமார் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ் உண்ணாவிரத கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் ஓ.பி,எஸ் ஆதரவு எம்.எல்.ஏவாகவும் மாறிவிட்டார்.

இதனால் ஓ.பி.எஸ் அணியின் பலம் 11 லிருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏக்கள் மேட்டுப்பாளையம் சின்ராஜ், கவுண்டம்பாளையம் ஆருக்குட்டி ஆகியோர் அருண்குமார் வருகையால் உற்சாக மடைந்தனர்.

கோவையின் முன்னாள்  மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் தாமோதரன், ஆகியோரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

click me!