அவங்க சைடுல இருந்து எந்த மனு வந்தாலும் நிராகரிங்க.. இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jul 13, 2022, 6:46 AM IST
Highlights

பொதுக்குழு மற்றும் செயற்குழு எந்த சட்டவிதிகளின்படியும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் 

அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை மாற்றியமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 11ம் தேதி அதிமுக பொதக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்ட இபிஎஸ், கே.பி.முனுசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன் என்றார். 

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஓபிஎஸ் உடனடியாகக் கடிதம் எழுதினார். நேற்று அதிமுக கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கும் புதிய பொருளாளர் தேர்வு குறித்து கடிதம் எழுதினார். தற்போது, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 

இதையும் படிங்க;- இணை ஒருங்கிணைப்பாளர் கே.சி. பழனிச்சாமி, அவைத் தலைவர் அன்வர் ராஜா.? பாயத் தயாராகும் ஓபிஎஸ் முகாம்!

அதில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவினர் பொறுப்பில் உள்ளனர். அந்தப் பொறுப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு கொடுத்தால் அதை நிராகரிக்க வேண்டும். நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு எந்த சட்டவிதிகளின்படியும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க;-  நானே அதிமுக பொருளாளர்.. என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது.. ஆட்டத்தை ஆரம்பித்த OPS.. அதிர்ச்சியில் EPS

ஆகவே, அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து தரப்புக்கும் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி சட்டரீதியான நடவடிக்கைகளில் தீவிரமாக ஓபிஎஸ் இறங்கி உள்ளது இபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ஓபிஎஸ்ஸின் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க;-  அதிமுக அலுவலகம் சீல்.. களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

click me!