ஆண்மை விவகாரம்… அதிமுக போட்ட போடு…! ஒரே நாளில் சரண்டரான நயினார் நாகேந்திரன்

By manimegalai aFirst Published Jan 26, 2022, 8:03 AM IST
Highlights

அதிமுக பற்றி நான் கூறிய கருத்துகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: அதிமுக பற்றி நான் கூறிய கருத்துகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மதமாற்ற பிரச்னையால் தான் உயிர் துறந்தார் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. அவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.

இது தொடர்பாக டுவிட்டரில் திமுகவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன் வைத்து வருகின்றன. ஒரு கட்டத்தின் மாணவி பலிக்கு நீதி கேட்டு, நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பாஜகவின் இந்த போராட்டம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் முற்றிலும் கூட்டணி கட்சியான அதிமுகவை சீற்றம் கொள்ள வைத்துவிட்டது. குறிப்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுகவையும், அதன் தலைமையையும் செமத்தியாக அதிர வைத்துள்ளது.

போராட்டத்தில் அவர் பேசியது இதுதான்: எங்களுடன் கூட்டணியில் அதிமுக இருக்கு, அது இருக்கு இல்லைங்கிறது 2வது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக, ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நான் பார்க்க முடியவில்லை.

"

நிறையபேரு… நீங்களும் பேசலாமே என்று கேட்கலாம், 4 பேரை வச்சு அங்கே போய் ஒண்ணும் செய்ய முடியாது, பேசலாம்னா வெளிய தூக்கி போட்டுருவாங்க என்று பேசி இருக்கிறார்.

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுதான் அதிமுகவை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் உலுக்கி போட்டு இருக்கிறது. நீங்கள் வேண்டும் என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் ஆண்மையுடன் நின்று வெற்றி பெறுங்கள் என்று அதிமுக ஐடி விங்கின் ராஜ் சத்யன் உள்ளிட்ட பலரும் ஆவேசம் அடைந்து கடும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக, ஆண்மை என்ற இவரது பேச்சு அதிமுக, பாஜக கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும், இந்த கூட்டணி வேண்டுமா? தொடர வேண்டுமா? என்ற பேச்சுகள் அதிமுக மேல் மட்டத்திலேயே எழுந்து வருவதாக தகவல்கள் எழுந்துள்ளன.

இந் நிலையில், தாம் பேசிய ஆண்மை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தமது பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட உள்ளதாக நேற்றிரவு அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்! என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் பேசிய பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள், கூட்டணியில் எழுந்த சலசலப்பு ஆகியவற்றின் அடுத்த கட்டமாகவே அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

அதிமுகவில் இத்தனை ஆண்டுகாலம் இருந்துவிட்டு இப்போது பாஜகவில் இருப்பதாலேயே இப்படி பேச வேண்டுமா என்று கருத்துகளும் அவரது கவனத்துக்கு கொண்டு போகப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. அதன் விளைவாகவே நயினாரிடம் இருந்து இந்த விளக்கம் வெளியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

click me!