இந்தியாவிலேயே நம்பர் 1 அமைச்சர்.. நோட்டா கூட போட்டி போடும் பாஜக.. முற்றும் பாஜக Vs திமுக மோதல்!

By Raghupati RFirst Published Sep 10, 2022, 8:25 PM IST
Highlights

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, '2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.  இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும் ? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. 

அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறினார். கரூர் இன்று திராவிட மாடல் பயிற்சி பட்டறை கரூரில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘வரும்  2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக கட்சி பணி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

எதிர்க்கட்சிகள் நமது அரசை குறை கூறும்போது சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்து கருத்து மோதல்கள் இருக்க வேண்டும். ஆனால் நேரடியாக எந்தவித மோதலும் இருக்கக் கூடாது.  நோட்டாவுடன் போட்டிபோடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 

தமிழக முதல்வர் மு.க  ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசு  இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். தமிழக முதலமைச்சர் இது எனது அரசு என்று கூறாமல் நமது அரசு என்று தான் கூறி அனைவரையும் சமமாக பார்க்கிறார்’ எனக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

click me!