“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

By Raghupati R  |  First Published Sep 10, 2022, 7:45 PM IST

தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக எம்எல்ஏக்கள் இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர். 

இந்த சந்திப்பில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, '2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் தான் பேசினார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம்சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார். எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். 

இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.  இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும் ? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். 

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்' என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

click me!