கோவில் நிலம் எப்படி வக்ஃப் போர்டு நிலமாச்சு.. மோசடியை முறியடிப்போம்.. கங்கணம் கட்டிய H.ராஜா.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2022, 5:04 PM IST
Highlights

திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பர்களும் வக்ஃப்  போர்டுக்கு சொந்தமானது என பதிவாளர் அறிவித்திருப்பதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பர்களும் வக்ஃப்  போர்டுக்கு சொந்தமானது என பதிவாளர் அறிவித்திருப்பதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில் நிலம் எப்படி வக்ஃப் போர்டு நிலமானது, இந்த மோசடியை முறியடிப்போம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ளது திருச்செந்தூரை, இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஒப்பந்தம் செய்தார். பின்னர் அந்த நிலத்தை பத்திர பதிவு செய்ய திருச்சி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.

ஆனால் சார் பதிவாளர் அந்த நிலம் வக்ஃப்  போர்டுக்கு சொந்தமானது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலத்தை வெளிநபர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாது அதை பத்திரப் பதிவு செய்ய வேண்டுமென்றால் சென்னை சென்று வக்ஃப்  வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வரவேண்டும் என சார்பதிவாளர் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலத்தின் உரிமையாளர், இதுகுறித்து அப்பகுதி பாஜகவினரிடம் புகார் கூறினார். அவர்கள் இப்பகுதியில் கோவில்கள், விவசாய நிலங்கள், வீடுகள் இருக்க இந்த நிலம் எப்படி வக்ஃப் போர்டுக்கு சொந்தமாகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பதிவாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூரை கிராமம் சர்வே எண் முழுவதும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும் இணை சார்பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் சில சர்வே எண்கள் மற்றும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில சர்வே எண்கள் உட்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்ஃப்  வாரியத்திற்கு சொந்தமானது என்றும்,

வக்ஃப் வாரியம் நமது அலுவலகத்திற்கு கோப்புகளை அனுப்பியுள்ளது எனவே ஆவணங்கள் பதிவுக்கு வருமுன் மேற்படி சர்வே எண்களில் வக்ஃப் போர்டுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதா என சரி பார்த்த பின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப் பதிவுக்கு எடுத்து வருமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய கோப்பு 3 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளரின் இந்த அறிவிப்பு அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இதைத்தான் பாஜகவினர் பிரச்சினையாக எழுப்பி வருகின்றனர், தற்போது இந்த விவகாரத்தில் எச். ராஜா தலையிட்டு கருத்து கூறியுள்ளார், இதுதொடர்பாக அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,  திருச்செந்துறை கிராமத்திலுள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம்... வக்ஃப்  போர்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பும், உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். இது எப்படி சாத்தியம், கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம் எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம்  பூதாகரமாகி வருகிறது.  பாஜகவினர் சார்பதிவாளர் அலுவலகத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

click me!