மனசாட்சியோடு திமுக யோசித்து பாருங்கள்.. அப்புறம் புரியும்.. மின் கட்டண உயர்வுக்கு எதிராக கொதிக்கும் தினகரன்.!

By vinoth kumarFirst Published Sep 10, 2022, 1:22 PM IST
Highlights

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். 

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக கோவை, மதுரை, சென்னையிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றது. அப்போது, பங்கேற்ற பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்த போதிலும் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என டிடிவி.தினகரன் காட்டமாக கூறியுள்ளார். 

click me!