பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப்படை முழு ஆதரவு அளிப்பதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
சாதி மத வழக்கு பேதமின்றி பொதுமன்னிப்பின் கீழ் 10 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வலியுறுத்தி தூய அரசியலை முன்னெடுத்துச் செல்லும் தோழர் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கிற தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாட்டில் இறையாண்மை என்ற பூதத்தை காட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பலரை சிறையில் வைத்திருப்பது மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற செயல். பல்வேறு தரப்பினரை காலம் கடந்து சிறையில் வைத்திருப்பதும் குறிப்பாக இஸ்லாமிய தோழர்களை சிறைப்படுத்துவதில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சம் காட்டி வருவதும் தொடர்ந்து நடந்தேறுகிறது, இது இஸ்லாமிய சமுதாயத்திற்கு காட்டும் வன்மம்,
இதையும் படியுங்கள்: நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... அழகான மொழிதான், ஆனா ரொம்ப கஷ்டமாச்சே.. ராகுல் காந்தி.
நீண்டகால சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் மனநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது, சிறை வாசம் அவர்களுக்கு பல படிப்பினைகளையும் தந்திருக்கிறது, இவற்றை கடந்த காலங்களில் விடுதலையான இஸ்லாமிய சிறைவாசிகளின் வாக்குமூலங்களும், நேர்காணல்களும், சட்ட வழிமுறைகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இதையும் படியுங்கள்: இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!
இதனை தமிழக அரசும் புரிந்துகொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகள் அனைவரையும் மனிதநேய அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சிறை என்பது தண்டனை கூட மட்டுமல்ல அது மனித வாழ்வை பண்படுத்தும் பயிற்சிகூடமும் தான் என்பதை ஆளும் அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் 166வது விதியை பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளார். இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 161 வது விதியை பயன்படுத்தி வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்க இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.