நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... அழகான மொழிதான், ஆனா ரொம்ப கஷ்டமாச்சே.. ராகுல் காந்தி.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2022, 9:42 AM IST
Highlights

நான் தமிழ் படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ் மிகவும் அழகான மொழி, ஆனால் அதை படிப்பது  கடினமாக இருக்கும் என்று கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

நான் தமிழ் படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ் மிகவும் அழகான மொழி, ஆனால் அதை படிப்பது  கடினமாக இருக்கும் என்று கருதுவதாக அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 2024  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பல மாநிலங்களில் செல்வாக்கு இழந்துள்ள காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீட்டெடுக்கு வேண்டிய நிர்பந்தத்தில் அக் கட்சி உள்ளது.  இதற்காக இதுவரை யாரும் செய்யாத அளவிக்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பயணம் என்ற யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் அவரது நடை பயணம் தொடங்கியது.

இதையும் படியுங்கள்: அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பன்னீருக்கு அனுமதி மறுப்பு..?? அதிர்ச்சியில் ஓபிஎஸ்.. குஷியில் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அப்பயணத்தை தொடங்கி வைத்தார், கன்னியா குமரி பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி பயணம் செய்தார், இலக்கை அடைந்தவுடன் அங்கி பிற்பகல் 1 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, தமிழ் படிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்,  தமிழ் மிகவும் அழகான மொழி, ஆனால் அதை கற்பது மிகவும் கடினமாக இருக்கும் என நான் கருதுகிறேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்: இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!

அப்போது அவரிசட் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர், அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க மறுக்கிறீர்கள், ஆனால் பேரணியை மட்டும் தலைமையேற்று நடத்துகிறார்களே, இது முரணாக இல்லையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ராகுல், நான் இந்தப் பேரணியில் தலைவராக அல்ல, காங்கிரஸ்  தொண்டனாக கலந்து கொண்டுள்ளேன்,  நான் இதை தலைமையேற்று நடத்த வில்லை தொண்டனாக இருந்து அனைவரும் பயணிக்கிறேன் என்றார்.

நான் காங்கிரஸ் தலைவராக வரலாமா வேண்டாமா என்பது குறித்து கட்சி பதவிகளுக்கான தேர்தலின்போது தெளிவாகத் தெரியும் என்றார், ஏற்கனவே நான் என்ன செய்ய வேண்டும் என்பதில்  நான் தெளிவாக முடிவு செய்துவிட்டேன், எனவே என்னிடத்தில் எந்த குழப்பமும் இல்லை என அவர் பதிலளித்தார். 
 

click me!