இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!

By vinoth kumar  |  First Published Sep 10, 2022, 9:06 AM IST

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக ஒரு இன்ச் கூட அடி எடுத்து வைக்கவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தரவரிசை பட்டியலில் தமிழகம் 15வது இடத்தை பிடித்தது. 


திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிய வரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக ஒரு இன்ச் கூட அடி எடுத்து வைக்கவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தரவரிசை பட்டியலில் தமிழகம் 15வது இடத்தை பிடித்தது. திமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு பட்டியலில் தமிழகம் 28வது இடத்தை பிடித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;-  ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம்.!வாய் நீளம் காட்டிய திமுக...தொடரும் மாணவிகளின் தற்கொலை - இபிஎஸ் ஆவேசம்

 நீட் தரவரிசை பட்டியலில் தமிழகம் இறங்கி கொண்டே போவது துரதிஷ்டவசமானது. மதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் திறந்து வைத்து உள்ளார். அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் அதிமுகவை வசைபாடி சென்று உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தற்காலிக பதவியில் உள்ளார் என முதல்வர் கூறி உள்ளார். ஸ்டாலின் திமுகவில் எவ்வாறு பதவிகளுக்கு வந்தார் என நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதி கையை பிடித்து திமுகவில் பதவி பெற்றவர் ஸ்டாலின். எடப்பாடி பழனிச்சாமி நெருப்பாற்றலில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார்.

திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிய வரும். உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்.எல்.ஏ க்கள் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி வேண்டும் என சொல்லுவார்கள். அதிமுகவிலிருந்து நீக்கபட்ட ஒரு சில துரோகிகளை தவிர அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியில் கீழ் ஒற்றுமையாக உள்ளோம்.

அதிமுகவில் இருந்த ஒரு சில துரோகிகளின் பின்புலத்தில் இருந்து கொண்டு திமுக அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறது. சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாமல் போனது என்பதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் வகிக்கிறார். அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் நீக்கப்பட்டு உள்ளார்.  அதிமுகவிலிருந்து நீக்க செய்யப்பட்டவர்கள் குறித்து நான் பேச தயாராக இல்லை என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதையும் படிங்க;- அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை.. இந்த புருடா விடுற வேலை எல்லாம் இங்க வேணாம்-மு.க.ஸ்டாலின் கிண்டல்

click me!