தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி போன்று அறிகுறிகள் இருந்து வந்தது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
undefined
அதில், அவருக்கு பாசிடிவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.