சசிகலா சந்திப்பு ப்ளான் பண்ணி நடந்ததா? ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும் பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Sep 10, 2022, 6:30 AM IST

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அதுதான் எனது எண்ணமும் கூட. அனைவரும் என்பதில் சசிகலாவும், டிடிவி. தினகரனும் அடங்குவர். 


சசிகலா, டிடிவி. தினகரனை கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஒரத்தநாடு அருகே இன்று சசிகலாவை  சந்திப்பு தற்செயலாக நடந்தது தான். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்... ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி!!

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அதுதான் எனது எண்ணமும் கூட. அனைவரும் என்பதில் சசிகலாவும், டிடிவி. தினகரனும் அடங்குவர். சசிகலாவையும், டிடிவி. தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு இபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார், எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கட்சியை அபகரிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதிமுக அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் காணாமல் போய்விட்டது என முதலில் அவர்கள் கூறட்டும் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  சசிகலாவுடன் ஓபிஎஸ் அணியின் முதல் சந்திப்பு... அதிர்ச்சியில் இபிஎஸ்

click me!