எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்... ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி!!

Published : Sep 09, 2022, 10:39 PM IST
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்... ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி!!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அவரது அனுமதி இன்றி எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றது தான் அத்துமீறல். அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நாங்கள் அலுவலகத்திற்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தான் சொல்லி இருக்கிறதே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச் செயலாளர் என எந்த இடத்திலாவது சொல்லப்பட்டு இருக்கிறதா?

இதையும் படிங்க: வேண்டாம் பரந்தூர் விமான நிலையம்.. திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சி - பரபரப்பு

அவராகவே அந்த பதவியை பயன்படுத்தி கொள்கிறார். கழக பணியாற்றிட அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் செல்வார்கள். நாங்களும் செல்வோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் தான் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல பாதுகாப்பு தருவோம் என கூறப்படும் தகவல் பொய்யானது. எல்லோரையும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருவதை வைத்திலிங்கமும் சொல்கிறார். சசிகலா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராகி இருக்க முடியுமா? யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

இதையும் படிங்க: நீட் தேர்வு மரணங்களுக்கு இவர் தான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி மீது பழியை போட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து துரோகி என கூறுகிறார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வமும் அநாகரிகமாக பேசுவது இல்லை. யாரையும் இணையவிடாமல் எடப்பாடி பழனிசாமி செய்வதற்கு காரணம் என்ன? யார் காலில் விழுந்தாவது வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை உடைக்க பார்க்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை காலம் பதில் சொல்லும். நாட்டு மக்கள் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது. அவரை முதலமைச்சராக ஆக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தவிக்கவிடப்படுவார். அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!
ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!