நீட் தேர்வு மரணங்களுக்கு இவர் தான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி மீது பழியை போட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

By Raghupati R  |  First Published Sep 9, 2022, 9:08 PM IST

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.


இந்த தேர்வை சுமார் 17 லட்சத்து 78 ஆயிரத்து 025 பேர் எழுதினர்.மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல்12 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 4 லட்சத்து 29,160 மாணவர்கள், 5 லட்சத்து 63,902 மாணவிகள், 7 திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 93,069 (56.28%) பேர் தேர்ச்சியடைந்து, மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

இது கடந்த ஆண்டைவிட 0.06% சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு 56.27 சதவீதமாக இருந்த தேர்ச்சி அளவு 2019-ல் 56.50 சதவீதமாக உயர்ந்தது. அதன்பின் 2020-ல் 56.44%, 2021-ல் 56.34%, 2022-ல் 56.28% என்ற அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது.ஒட்டுமொத்த தேர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பெரிதும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் 1,32,167 மாணவர்கள் தேர்வெழுதியதில் 67,787 (51.30%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது பேசிய அவர், 'நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்துள்ளதற்கு, கடந்த ஆண்டை விட 3 சதவீதமே குறைந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே  நீட் தேர்வு முடிவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!

நீட் தேர்வால் மரணமடைந்த ஸ்வேதா தொடர்பாக விடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பற்றிய கேள்விக்கு, எடப்பாடி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதாகவும் நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். நீட் தேர்வு முடிவுகளை ஒன்றிய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் வெளியிட்டதையடுத் து, முடிவுகளை பார்த்து அதிர்ச்சியுற்ற மாணவர்களுக்கு ஆதரவுக்கான நபர்கள் அருகில் இல்லாத சூழலால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம்' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !

click me!