அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பன்னீருக்கு அனுமதி மறுப்பு..?? அதிர்ச்சியில் ஓபிஎஸ்.. குஷியில் எடப்பாடி பழனிச்சாமி

By Ezhilarasan Babu  |  First Published Sep 10, 2022, 9:16 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக  தலைமை அலுவலகம் செல்ல அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக  தலைமை அலுவலகம் செல்ல அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல விரும்பினால் நீதிமன்ற அனுமதியுடன் வரவேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதுவரை அது போன்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு வரவில்லை என ஓபிஎஸ் தரப்பில்  புறப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

அதிமுக தலைமை யார் என்பதில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதாரணமாக அமைந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிடையில் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் செல்ல  திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சசிகலா சந்திப்பு ப்ளான் பண்ணி நடந்ததா? ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும் பரபரப்பு தகவல்..!

இதற்காக பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது, சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் மனு கொடுக்கப்பட்டது, அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் எனவே அவரை அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: இதை மட்டும் செய்து பாருங்க.. திமுக எம்எல்ஏக்களே தமிழகத்தில் அதிமுக ஆட்சி வேண்டும் சொல்லுவாங்க.. RB.உதயகுமார்.!

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் உரிய பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பன்னீர்செல்வம் தரப்பினர் அதிகாரிகளிடம் இருந்து அதுபோன்ற எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், பன்னீர்செல்வம்  ஊரில் இருந்து சென்னை திரும்பியவுடன் அனைவரும் கலந்தாலோசித்து தலைமை கழக அலுவலகம் செல்லும் தேதி அறிவிப்போம் என தெரிவிக்கின்றன்னர். ஓ பன்னீர் செல்வத்திற்கு அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!