நீட் தேர்வை நீக்க முடியாது.. திமுக இந்த விஷயத்தை இனி பேசக்கூடாது... கறாராக சொல்லிய அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2022, 6:14 PM IST
Highlights

நீட் தற்கொலைகளுக்கு திமுகதான் காரணம், எனவே நீட் விவகாரத்தை இனி திமுக அரசு கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்

.

நீட் தற்கொலைகளுக்கு திமுகதான் காரணம், எனவே நீட் விவகாரத்தை இனி திமுக அரசு கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை  தி நகரில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  நீட் தேர்வை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யவில்லை 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆரம்பத்தில் நீட் தேர்வு எழுத கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அது தற்போது சரி  செய்யப்பட்டுள்ளது.

ஆனால் திமுக அரசு மாணவர்களின் கண்ணையும், கைகளையும் கட்டி வைத்து விட்டு எந்த பயிற்சியும் தராமல் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி ஆகவில்லை என கூறினால் என்ன சொல்வது, ஏன் திமுகவின் உள்ள குடும்பத்தினரின் பிள்ளைகள் கவர்மெண்ட் கோட்டாவில் மருத்துவம் படித்தார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, திமுக அரசு இந்த கோரிக்கையை இனயாவது கைவிட வேண்டும்.

இவர்களின் செயல்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் இருந்து வருகிறது, அதுபோன்ற செயலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபடுவது வெட்கக்கேடானது. நீட் தேர்வின் தற்கொலைகளுக்கு திமுகவினரே காரணம். அடுத்து யார் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற ரேஞ்சுக்கு ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும், கனிமொழி ஓட்டமும் நடையுமாக இருந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கோவில் நிலம் எப்படி வக்ஃப் போர்டு நிலமாச்சு.. மோசடியை முறியடிப்போம்.. கங்கணம் கட்டிய H.ராஜா.

தற்போது ஆசிரியர்கள் என்ற அமைப்பையே திமுக அரசியல் படுத்தி வைத்திருக்கிறது. எனக்கு எதிராக அரவக்குறிச்சியில் ஜாக்டோ-ஜியோ பிரச்சாரம் செய்தது. நான் ஒன்று கேட்கிறேன், இன்று மாணவர்களுடைய சகிப்புத்தன்மை குறைந்திருப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை? டெல்லி முதலமைச்சரை இங்கே கூட்டி வந்து அவர்களுடைய மாடலை இங்கே பயன்படுத்துகிறார்களாம், ஏற்கனவே தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலம் இந்த இடத்தில் டெல்லி மாடலுக்கு அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: சவூதியிலிருந்து அரசின் கடனை அடைக்க தனது பங்காக ரூ. 90 ஆயிரம் அனுப்பிய தமிழர்.. நன்றி தெரிவித்து அரசு கடிதம்

முன்னதாக 18 ஆண்டு காலம் இந்தியாவின் கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக இருந்த அனிதா தபால்துரைக்கு தமிழக பாஜக சார்பில் 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட அவர், பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  2019ஆம் ஆண்டு  பாடி பில்டிங் காக அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் என்பவர் தன்னை பாஜக இணைத்துக்கொண்டார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகிலாண்டேஸ்வரி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய  மாணவி சாமுண்டீஸ்வரி வெறும் 45 நாட்களில் பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதினேன், நீட் தேர்வு கடினமானது இல்லை, அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். 
 

 

click me!