பெரியார், அண்ணா, கலைஞர்: மூவரின் ஒற்றை முகம் தான் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி

By Velmurugan sFirst Published Dec 24, 2022, 3:39 PM IST
Highlights

பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரின் ஒற்றை முகமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரின் ஒற்றை முகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து கொண்டு சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நாம் இழந்த ஒவ்வொரு உரிமையையும் தற்போது மீட்டு வருகிறோம்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

கடந்த அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதிநிலைமையை ஓரளவு சரிசெய்து தேர்தல் வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மக்களுக்கு வழங்கி இருக்கிறார். இன்னும் வரக்கூடிய காலத்தில் மேலும் சில திட்டங்களை செயல்படுத்த உள்ளார். குறிப்பாக கோவை தொழில் முனைவோரின் பிரதான கோரிக்கையாக இருந்த விமான நிலைய விரிவாக்கப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அது முழுமையாக நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்

மேலும் செய்தியாளர்கள் தரப்பில் பாஜக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்று பதில் அளித்த அமை்சசர், தமிழகத்தில் மொத்தம் உள்ள பாஜக உறுப்பினர்கள் எத்தனை பேர், அவர்கள் வாக்கு வங்கி என்ன என்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும் பாஜக ஆட்சி காலத்தில் சமையல் எரிவாயு மானியத்தின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

click me!