அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!

By vinoth kumarFirst Published Dec 24, 2022, 2:38 PM IST
Highlights

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கம் ஒதுக்கும் இடம் தான், எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கம் ஒதுக்கும் இடம் தான். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது.

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கம் ஒதுக்கும் இடம் தான், எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். விடியா திமுக அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்காக செங்கரும்பை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு திமுக துரோகம் செய்துள்ளது. 

சில நாட்களுக்கு முன் பாஜக, திமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடும் என சி.வி.சண்முகம் பேசிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். 

click me!