சீமான் வீட்டில் மின் தடை..ட்வீட்டரில் மோதிய சீமான் Vs அமைச்சர்.. மின் இணைப்பு எண் ஏன் தரல? அமைச்சர் தாக்கு..

By Thanalakshmi VFirst Published May 23, 2022, 12:00 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சி சீமான், தனது வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டும் அவர்  எந்த பதிலும் அளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

கரூர் மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, பல்வேறு துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். https://t.co/4KegbnFuub

— V.Senthilbalaji (@V_Senthilbalaji)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, " மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் 99 சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்றும் தற்போது மின் வெட்டு, மின் பற்றாக்குறை போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அடுத்த இரண்டு நாட்களுக்குள் 4,80,000 டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு இருப்பதாக தெரிவித்தார்.  அதே போல் தமிழகத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் விளக்கினார்.

மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு!

அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்! https://t.co/ImmsfHi5i3

— சீமான் (@SeemanOfficial)

தமிழகத்தில் உள்ள் காற்றாலைகள் மூலம் தற்போது அதிக அளவில் மின் உற்பத்தி கிடைப்பதால், செலவை குறைக்கும் வகையிலேயே அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகையில் கிடைக்கும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது. இதுக்குறித்து உண்மை தெரியாமல் நிலக்கரி பற்றாக்குறை என்று சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்ட பிறகு, அங்கு மின் உற்பத்தி தொடங்கும். தமிழகத்தில் தற்போது சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? நம் இனத்தை அழித்ததே அவர்தான்.! பொங்கி எழுந்த சீமான்

தமிழகத்தில் மின் உற்பத்தி 4,320 மெகாவாட் ஆக இருக்கும் நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சொந்த மின் உற்பத்தி மட்டும் 6220 மெகாவாட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக அவர் ட்வீட்டரில் பதிவிட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாம் தமிழர் கட்சி சீமான், தனது வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

ஏப்பா சீமான்..

இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா..

அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!

— சீமான் (@SeemanOfficial)

அதனால் அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டும் அவர்  எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் தனது வீட்டு மின் இணைப்பு எண் என்ன என்று சீமான் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் படிக்க: சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. ராஜீவ் காந்தியை விமர்சிக்க அருகதை கிடையாது.. எகிறி அடித்த ஜோதிமணி!

click me!