நீங்க உயர்த்துவீங்க.. நாங்க குறைக்கனுமா.. அண்ணாமலை இதெல்லாம் படித்தாவது தெரிஞ்கனும்.. அமைச்சர் பதிலடி..

By Thanalakshmi VFirst Published May 23, 2022, 10:46 AM IST
Highlights

பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு தமிழக அரசை குறைக்க சொல்வதா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ஒமைக்ரான் தொற்று செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், சுகாதாரத்துறையில் 4000 காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் செவிலியர்கள் 4448 பேரும், சுகாதாரப் பணியாளர்கள் 2448 பேரும் என மொத்தம் 7296 பேர் புதிதாக நியமட்டுள்ளதாக கூறிய அமைச்சர், ஏற்கனவே இருந்த ஊதியத்தை விட செவிலியர்களுக்கு 4000 ரூபாயும், சுகாதாரப் பணியாளர்களுக்கு 3000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.  மேலும் 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா..? என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இதையும் அண்ணாமலை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று வெளியீடு

click me!