உங்களுக்கு 72 மணிநேரம் தான் டைம்.. அதுக்குள்ள நிறைவேற்றுங்க.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.!

Published : May 23, 2022, 11:08 AM IST
உங்களுக்கு 72 மணிநேரம் தான் டைம்.. அதுக்குள்ள நிறைவேற்றுங்க.. திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.!

சுருக்கம்

திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல். டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாகக் கூறியுள்ளது.

முதல்வர் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றது குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை;- மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல். டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாகக் கூறியுள்ளது.

 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைத்து கொடுக்க வேண்டும், சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மன்மோகன் சிங் ஒவ்வொரு முறையும் அனைத்து மாநில முதல்வர்களை கேட்டு தான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா? இறக்கினாரா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும் போது பிரதமர் மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல.

காலையில் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மாலையில் அவர் இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். நடிகர் வடிவேல் போல முதல்வர் செயல்படுகிறார். முதல்வர் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றது குறித்து இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது. இது போன்று முதல்வர் நடந்து கொள்வதால் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என காட்டமாக கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு