‘ரேப், மர்டர் அக்யூஸ்டுக்கெல்லாம் அடுத்த வருஷம் பத்ம பூஷன் கிடைக்கலாம்’...சொல்றவரு ஒரு முன்னாள் டிஜிபி...

By Muthurama LingamFirst Published Jan 26, 2019, 4:35 PM IST
Highlights

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கெல்லாம் பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது என்னும்போது அடுத்த ஆண்டு  கற்பழிப்பு,கொலை கேஸ்களில் மாட்டியிருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட கிடைக்க வாய்ய்பிருக்கிறது’ என்று கிழித்துத் தொங்கவிடுகிறார் கேரள முன்னாள் டி.ஜி.பி. சென்குமார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காவல் அதிகாரி,’ நம்பி நாராயனுக்கு பத்ம பூஷன் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. விஞ்ஞானியாக அவர் என்னத்தை சாதித்துவிட்டார் என்று அவருக்கு இதைக் கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இது கண்டிப்பாக ஆக்கபூர்வமான பணிகள் செய்துகொண்டிருக்கும் ஒரு இளம் விஞ்ஞானிக்குப் போய்ச்சேர்ந்திருக்க வேண்டிய விருது.

சட்டத்தைப் பொறுத்தவரை நம்பி நாராயண் குற்றத்திலிருந்து  பரிபூர்ணமாக விடுதலையாகாதவர்தான். சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,இந்த வருடம் இவருக்கே கிடைத்திருக்கிறதென்றால் அடுத்த வருடம்,  கற்பழிப்பு, கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு சிறைகளில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் பத்ம பூஷன் கிடைத்தாலும் ஆச்சர்யப்படவேண்டியதில்லை’ என்கிறார்.

சென்குமாரின் கருத்து தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக ரியாக்ட் செய்யும் நம்பி நாராயண், ‘இந்த விருது இஸ்ரோ உளவு வழக்கில் தான் நிரபராதி என்பதை இவ்வுலகுக்கு எடுத்துச்சொல்ல உதவியிருப்பதாகக் கருதுகிறேன்’ என்கிறார்.

click me!