கடவுள் பெயரில் ஆணை..தமிழ் மொழியில் எம்.பி பதவியேற்ற இளையராஜா - வைரல் வீடியோ !

By Raghupati R  |  First Published Jul 25, 2022, 3:54 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார்.


Ilayarajaவிளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பிக்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !

கடந்த திங்கள் கிழமையின் போது,  நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது இளையராஜா பதவியேற்கவில்லை. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது இளையராஜா அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் பங்கேற்க முடியவில்லை என்று இளையராஜா தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..மனைவியின் பிறப்புறுப்பில் பீர் பாட்டில்.. நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர வெறிச்செயல்

கடவுளின் பெயரால் ....

அழுத்தம் திருத்தமாக தமிழர்களின் நெஞ்சில் பதிய வைத்த இசைஞானி இளையராஜா அவர்கள் pic.twitter.com/T1FdAA74Jq

— Ma.Venkatesan (@MaVeWriter)

இந்நிலையில் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பியாக தமிழில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு  மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது, ‘கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்’ என்று கூறி தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்தார் இளையராஜா. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி

click me!