பரபரப்பு..எஸ்.பி வேலுமணி உதவியாளர் வீட்டில் விடிய விடிய ஐ.டி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..?

Published : Jul 10, 2022, 03:23 PM IST
பரபரப்பு..எஸ்.பி வேலுமணி உதவியாளர் வீட்டில் விடிய விடிய ஐ.டி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..?

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் நள்ளிரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் வடவள்ளியை சேர்ந்த சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க:எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!

கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த என்ஜீனியர் சந்திரசேகர் என்பவர் கோவை புறநகர தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி இவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் சந்திரசேகரின் சகோதர், சகோதரிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் படிக்க:பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை

இந்த சோதனையில், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவரது நண்பரும் கே.சி.பி நிறுவனத்தின் உரிமையாளருமான சந்திரபிரகாஷ்க்கு சொந்த இடங்களில் 5 வது நாளாக இன்று சோதனை நடந்து வருகிறது. கே.சி.பி நிறுவனம், ஆலயம் அறக்கட்டளை, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் 3 வது சோதனை தொடர்கிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பி வசந்தகுமார் இல்லத்தின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவு முதல் வருமான வரித்துறை சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க:தர்மயுத்த காலம்.. ஓபிஎஸ்ஸுடன் பயணித்ததை நினைத்து வெட்கப்படும் கே.பி. முனுசாமி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!