பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை

By Raghupati R  |  First Published Jul 10, 2022, 1:07 PM IST

தமிழ்நாடு பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில்  மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.


அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

எனினும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை  சூளைமேட்டில் உள்ள சவுதாமணி  வீட்டில் வைத்து அவரை சைபர் கிரைம் போலீசார் இன்று  கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் சௌதாமணியை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.  

இந்நிலையில் சௌதாமணியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சௌதாமணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் விதமாக வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்துகொண்டு இருக்கிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு.. திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் திடீர் ரத்து.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல் !

தமிழகத்தின் 8 கோடி இந்து மக்கள் வணங்கும் தெய்வங்களை, சமூக ஊடகங்கள் மூலம் கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்தி பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகிவிட்டது.ஏற்கனவே கருப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை , கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். சமீபத்தில் யு டு புரூட்டஸ் என்ற சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளனர்.  இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுத்தும் இதுவரை திமுக அரசும் காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதே சமயம் சௌதாமணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்புணர்ச்சியோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள திமுக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்’ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தேவையே இல்லை.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

click me!