ரோசம், மானம் இருக்கா.. வாழவே தகுதி இல்லாதவர் கே.பி முனுசாமி -டாராக கிழித்த கோவை செல்வராஜ்

Published : Jul 09, 2022, 08:32 PM IST
ரோசம், மானம் இருக்கா.. வாழவே தகுதி இல்லாதவர் கே.பி முனுசாமி -டாராக கிழித்த கோவை செல்வராஜ்

சுருக்கம்

கே.பி முனுசாமி வாழவே தகுதி இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர்  கோவை செல்வராஜ்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நாளை மறுதினமான ஜூலை 11 காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ,பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ‘சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி இன்று அதிமுகவிற்கு நான் புதிதாக வந்ததாகவும், பன்னீர்செல்வம் கூறி நான் பேசுவதாகவும் கூறியுள்ளார். தவறான கருத்தை கூறி, யாரையும் தூண்டி விடுபவர் அல்ல நான். முனுசாமி காசுக்கு அடிமை . 1974 ல் அதிமுகவில் 14 வயதிலேயே வந்தேன். 

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

எட்டப்பன் பழனிசாமி , முனுசாமி போல் அல்ல நான். 1984ல் ஆர்.எம் வீரப்பன் மீதான கோபத்தால்  காங்கிரஸ் சென்றோம். பின்னர் ஜெயலலிதா தலைமை எற்றவுடன் அதிமுக வந்தோம். நான் யாரையும் போல கொலைகாரன் அல்ல. பராசக்தி புத்தகம் வைத்திருந்தாக ஓ.பன்னீர் செல்வம் கூறியது 1962ல் அப்போது அதிமுக இல்லை.  துரைமுருகன் வெற்றிக்கு வீரமணி, முனுசாமி தான் காரணம். அதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது. 

கே.பி முனுசாமி ஒழுங்காக நடந்துகொள். உன்னுடைய ஆயோக்கிய தனத்தை வெளிப்படுத்துவேன். உன்னைப்போல் கோமாளி அல்ல நான். கிருஷ்ணமூர்த்தியிடம் கடந்த தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினார். திமுக உதவியுடன் பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என முனுசாமியால் கூற முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார் கோவை செல்வராஜ்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்

முனுசாமி பொதுவாழ்க்கை வாழ தகுதி இல்லாதவர். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கி , ராஜ்ய சபா வாய்ப்பு வழங்கியது ஒபிஎஸ். சட்டமன்ற தேர்தலில்தான் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கினார். ரோசம் , மானம் , சூடு , சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. நடிகையை ஏமாற்றிய புகார்.. எஸ்கேப் ஆன முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!