எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!

By Raghupati R  |  First Published Jul 10, 2022, 2:08 PM IST

அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு.. கோத்தபய ராஜபக்சே சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..! வைரலாகும் தகவல்

இந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்தப் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களும் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில்,  நாளைய அதிமுக பொதுக்குழுவிற்கான வரவேற்பு பேனர்கள் மற்றும் பதாகைகளில் ஒரு இடத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் திடீர் ரத்து.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல் !

15 நிமிடங்களுக்கு முன்புதான் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் படம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் இடம்பெறாமல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், எப்படியும் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எடப்பாடி தரப்பு நம்புவதால் தான் இப்படி ஓபிஎஸ் தரப்பை புறக்கணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை

click me!