உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு... பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் என்.வி.ரமணா..!

By Thiraviaraj RMFirst Published Aug 31, 2021, 11:03 AM IST
Highlights

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்கப்பட்ட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 
 

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்கப்பட்ட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

 

உச்சநீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

click me!