
பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
பாஜக தலைவர்கள் பங்கேற்பு
தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்கின்றனர். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
பிரதமர் மோடி
அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !