“நீட் விவகாரத்தில் ஆளுநர் அறியாமையில் பேசுகிறார்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Aug 14, 2023, 5:02 PM IST

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் அறியாமையில் பேசுவதாகவும், மேலும் அவர் தனி உலகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, சிறு குறு தொழில் முனைவோருக்கு மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன் மற்றும் தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பாக கடன் உதவி வழங்கிய 6 வங்கிகள் மற்றும் சிறப்பாக பயிற்சி அளித்த நிறுவனங்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்கள் மற்றும் பணி ஆணைகளை வழங்கினார்.

Latest Videos

undefined

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறிநாய் கடிக்கான சிகிச்சை? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு

விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 152 நகர்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத் தரச் சான்றிதழ்களும், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு பணிநியமன ஆனைகளும், ஓட்டுநர் உரிமங்கள், சுய உதவிக்குழு சார்ந்த மற்றும் பயிற்சி பெற்ற மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் சான்றிதழ் வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

மகளிர் சுய உதவி குழு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் 100 ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் யோசித்து செயல்படுகிறார். தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டமானது வருகிற செப் 15 அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்க உள்ளோம். இந்த திட்டத்திலும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாப்கின் தயாரிப்பதை தனியார் துறை தான் நடத்தி வருகின்றது. ஆனால் இப்போது மகளிர் சுய உதவி குழு மகளிர் சார்பில் தயாரித்து செயல் படுத்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

13 வருடங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்கள்; காவல் துறையினர் அதிரடி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வில் மாணவர் உயிரிழப்பு வருந்தக்கூடிய விஷயம். இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருக்கிறார். இன்று அவருடைய தந்தையும் உயிரிழந்திருக்கிறார். ஒன்றிய  பாஜக அரசு இதை மனதில் கொள்ளாமல் மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை தொடரும்.

மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். முதல்வர் இதற்கான நடவடிக்கையை எடுப்பார். எந்தவிதமான தவறான முடிவுகளிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டாம். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பேசுவது அவரது அறியாமையை காட்டுகிறது. மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார். மாணவர்களின் கல்வி ஆர்வத்தை கொச்சைப்படுத்துகிறார். நீட் விவகாரத்தில் ஆளுநர் திமிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனி உலகத்தில் வாழ்கிறார் ஆளுநர் என்று விமர்சனம் செய்துள்ளார்.

click me!