துரியோதன,துச்சாதன கட்சி தி.மு.க.! உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் திருநாவுக்கரசர்- சீறும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Aug 14, 2023, 12:59 PM IST

துரியோதன,துச்சாதன கட்சி தி.மு.க ஒரு பெண்ணென்றும் பாராமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தியது துரியோதன, துச்சாதன கட்சியாக இருக்கக்கூடிய திமுக கட்சி.  நீட் தேர்வு மட்டுமல்ல கச்சத்தீவு போன்ற எந்த மக்களின் உரிமைக்கான பிரச்சினைகளுக்காகவும் திமுக குரல் கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 


ஆகஸ்ட் 20  ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக  எழுச்சி மாநட்டை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரையை நோக்கி "தொடர் ஜோதி ஓட்டம்" நடைபயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடைப்பயணத்தில்   500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்னையில் இருந்து மதுரையை நோக்கி பயணிக்க உள்ளனர். இன்று சென்னையில் தொடங்கி மாநாடு நடைபெறும் நாளில் மதுரையை சென்றடையும் வகையில் நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நீட் தேர்வு தோல்வியால் மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பாகவே இருக்கும் என கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் இதற்கு எத்தனை முறை திமுக அழுத்தம் கொடுத்தது, பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக  திமுக  உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன  குரல் கொடுத்தார்கள்? நீட், கச்ச தீவு, உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த ஒரு உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் திமுக வினர் குரல் கொடுக்க வில்லை. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பதாக இருக்கும் என்று சொன்னார்கள் அந்த சூட்சமம் எங்களுக்கு தான் தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள் அதற்கான கையெழுத்தை முதலில் போட்டிருக்க வேண்டியதுதானே குரோம்பேட்டில் நடைபெற்ற தற்கொலைகள் நீட்டுக்காக மனதை பதை பதைக்க செய்கிறது. திமுக உரிமையை மீட்டெடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவே இல்லை

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாக திருநாவுகரசர் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்தவர்,  உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார்.வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் திருநாவுக்கரசின் செயல் வருத்தத்திற்கு உரியது. பெண்ணென்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளை பேசி மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள் அதனால் சட்டமன்றத்தில் விட்டு வெளியேறினார் முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா.

ஒரு பெண்ணை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்திய துரியோதன ,துச்சாதன கும்பல் தான் இந்த திமுக கும்பல், தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி உண்மைகளை மறைத்து திருநாவுகரசர் பேசியிருப்பதாகவும், இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். திருநாவுக்கரசு அரசியலில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அதிமுகவுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்க வேண்டியவர் என்றும் கூறினார். 

click me!