1 கிலோ தங்கத்தை வீடு வீடாக கொடுப்பதாக சொன்னாலும் திமுகவை யாரும் நம்ப மாட்டார்கள் - செல்லூர் ராஜூ

By Velmurugan s  |  First Published Aug 14, 2023, 12:21 PM IST

கடுமையான விதிமுறைகளால் 60 லட்சம் பெண்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகையை முதல்வரால் கொடுக்க முடியாததால் விதிமுறையை தளர்த்தி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக மாநாட்டிற்கான விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை பரவை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். மேலும் மாநாட்டிற்கான அழைப்பிதழை பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக மாநாட்டை தங்களுக்கான மாநாடாக தமிழக மக்கள் நினைக்கிறார்கள். அதிமுக மாநாட்டால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இதுபோன்ற எழுச்சி எப்போதும் ஏற்பட்டதில்லை. 1972ல் கருணாநிதி ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்று சேர்ந்தார்கள். தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியை அகற்ற அலை அலையாய் மக்கள் அதிமுக கூட்டங்களுக்கு வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

திருப்பதி நடைபாதையில் ஆறு வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது; அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சி

கலைஞர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முதல்வர் பெண்களுக்கு கொடுக்க நினைத்தை இலக்கை எட்ட முடியவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர். இன்னும் என்னனென்ன செய்ய உள்ளார்கள் எனத்தெரியவில்லை.

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறிநாய் கடிக்கான சிகிச்சை? பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு

1000 ரூபாய் கொடுத்தால் மட்டுமல்ல ஒருகிலோ தங்கத்தை வீட்டுக்கு வீடு கொடுப்பதாக திமுக சொன்னாலும் மக்கள் அதை வாங்கவும், திமுகவுக்கு வாக்களிகவும் தயாராக இல்லை. சாதிக்கலவரம், மதக்கலவரம் நடப்பதால் திமுக ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என கொடுமைக்கு மேல் கொடுமை நடைபெறுகிறது என்றார்.

click me!