கவர்னருக்கு எந்த பவரும் இல்லை.. அவர் வெறும் போஸ்ட் மென் தான்... இறங்கி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Aug 20, 2023, 12:54 PM IST

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  நீட் எதிர்ப்பு தீர்மானத்தையும்  அப்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆதரித்தது. 


தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு விடியலை கொண்டு வந்ததுபோல் இந்தியா முழுவதும் விடியலை பெற்றுத் தருவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ;- நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  நீட் எதிர்ப்பு தீர்மானத்தையும்  அப்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆதரித்தது. நீட் எதிர்ப்பு மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதை சட்டமன்றத்துக்கே சொல்லாமல் மறைத்தது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- மோடி என்ற ஆரிய மாடலை வீழ்த்த போவது பெரியாரின் திராவிட மாடல் தான்.. தெறிக்க விட்ட ஆ.ராசா..!

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் தான் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு அதில் அதிகாரமில்லை. மசோதாவை குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால்காரர்தான் ஆளுநர். குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே அதற்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று ஆளுநர் கூறினார். ஆளுநரின் இந்த போக்கை கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை திமுக ஓயாது. 

இதையும் படிங்க;-  திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு விடியலை கொண்டு வந்ததுபோல் இந்தியா முழுவதும் விடியலை பெற்றுத் தருவோம். திமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஆளுநரிடம் துணிச்சலாக கேள்வி கேட்ட சேலம் அம்மாசியப்பன் ராமசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பாடாமல் துணிச்சலுடன் ஆளுநரிடம் அம்மாசியப்பன் கேள்வி எழுப்பினார் என முதல்வர் கூறியுள்ளார்.
 

click me!