மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார், வேன் மற்றும் பேருந்துகளில் அணிவகுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
அதிமுக மாநாட்டிற்கு செல்லும் அதிமுக மாவட்ட துணை செயலாளரின் டீசல் காரில் பெட்ரோல் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார், வேன் மற்றும் பேருந்துகளில் அணிவகுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க;- உங்க தாத்தாவையே பாத்தவங்க நாங்க! உதயநிதி இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்! சீறும் சி.வி.சண்முகம்..!
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க பிச்சைமுத்து. இவர் அதிமுகவின் மாவட்ட துணை செயலாளராகவும் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க;- ஒரு ஆளுக்கு ரூ.1000 கொடுத்து மதுரை அதிமுக மாநாடுக்கு ஆள் சேர்க்குறாங்க! மொத்தம் 250 கோடி! டிடிவி.தினகரன் பகீர்
இவர் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு செல்வதற்காக தனது விலை உயர்ந்த டீசல் காரில் டீசல் நிரப்புவதற்காக காரின் டிரைவர் பெட்ரோல் பங்கிற்கு எடுத்து வந்துள்ளார். அப்போது தவறுதலாக டீசலுக்கு பதிலாக பங்க் ஊழியர்கள் பெட்ரோல் போட்டுள்ளனர். இதை கவனித்த கார் டிரைவர் சத்தம் போட்டதால் பெட்ரோல் போடுவதை நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்று மாலை மாநாட்டிற்கு செல்ல வேண்டும் நான் என்ன செய்வது என அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கார் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.