அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருப்பூரிலிருந்து தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் 5000 பேர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த புறப்பட்டனர்.
அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன் தலைமையில் 5000க்கும் மேற்பட்டோர் வேன் மற்றும் பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட திருப்புமுனையாக அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் திமுக ஆட்சியை அகற்ற சபதம் மேற்க இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் , சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.