வட மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை சந்திப்பதன் மூலம் பாஜக எதிர்ப்பை ரஜினி ரசிகர்களிடையேயும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் குறைக்கலாம் என்பது தான் இந்த சந்திப்புக்கு பின்னால் உள்ள சதி அரசியல் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
காலில் விழுந்த ரஜினி
நடிகர் ரஜினி காந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக ரஜினி இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகியை சந்தித்த ரஜினி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதனையடுத்து ஜெயிலர் படத்தை உபி துணை முதல்வரோடு இணைந்து படத்தை பார்த்தார்.
undefined
இந்தநிலையில் நடிகர் ரஜினி , உ.பி. முதல்வர் காலில் விழுந்த நிகழ்வை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என பெருமைப்பட பேசிய ரஜினி காந்த் அவர்கள்,
ரஜினியின் வலதுசாரி சிந்தனை
வலதுசாரி அரசியலை நோக்கியே நகர்கிறார் என எல்லோருக்குமே புரிந்தது. பாஜக நிர்வாகிகள் பலர் கட்சி ஆரம்பிக்க ரஜினி பக்கம் இடம் பெயர்ந்தனர். தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்களும் திரு.ரஜினிக்கு முட்டுக்கொடுத்து பார்த்தனர். ஆனாலும் உடல் நிலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்தார். ஆனாலும் தமது வலதுசாரி அரசியல் போக்கை வெளிப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுக்குப்பிறகு இமயமலை போனவர், பாஜக ஆளும் மாநில ஆளுநர்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்ல; உபி முதல்வர் யோகியோடு ஜெயிலர் திரைப்படத்தை காணப்போவதாகவும் அறிவித்துள்ளார். இது ஏதோ சினிமாவுக்கான ப்ரமோசன் என நினைக்க வேண்டாம்.
ரஜினியின் சதியை முறியடிப்போம்
வட மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை சந்திப்பதன் மூலம் பாஜக எதிர்ப்பை ரஜினி ரசிகர்களிடையேயும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் குறைக்கலாம் என்பது தான் இந்த சந்திப்புக்கு பின்னால் உள்ள சதி அரசியல். திரைப்படத்தின் முலம் வரும் ஆபத்தை விட திரு.ரஜினியின் பாஜக ஆதரவு அரசியல் மிக ஆபத்தானதாகும். தனது புகழை பாஜகவுக்கு திசை திருப்பும் ரஜினியின் சதியை புரிந்து கொண்டு முறியடிப்போம் என வன்னி அரசு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதிமுக மாநில மாநாடு..! மதுரையில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்