திமுக தேர்தலில் வாக்குறுதியில் நீட் ரத்து செய்யும் ரகசியத்தை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று கூறினர். ஆனால், அதைப் பற்றி சிறிதும் வெட்கப்படாமல் இரண்டரை ஆண்டு காலம் அக்கறை இல்லாத முதலமைச்சருக்கு இப்போது அக்கறை வந்திருப்பதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தல் என்றார்.
தமிழர்களுக்கு துரோகத்தை செய்துவிட்டு நீட்டை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று என அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை எம்.பி. ;- நீட் தேர்வை 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. இப்போது நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி மாணவர்களின் இறப்பில் திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தன்னுடைய மகனுக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே இந்த நீட் நாடகத்தை திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.
undefined
இதையும் படிங்க;- குடிகாரன் சி.வி.சண்முகம்! இன்னொருமுறை இப்படி குறிப்பிட்டா நடவடிக்கை தான்! அண்ணாமலையை எச்சரிக்கும் OPS அணி.!
திமுக தேர்தலில் வாக்குறுதியில் நீட் ரத்து செய்யும் ரகசியத்தை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று கூறினர். ஆனால், அதைப் பற்றி சிறிதும் வெட்கப்படாமல் இரண்டரை ஆண்டு காலம் அக்கறை இல்லாத முதலமைச்சருக்கு இப்போது அக்கறை வந்திருப்பதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தல் என்றார். மத்திய அரசு மீதும் அதிமுக மீதும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மாணவ, மாணவர்களின் உயிர்கள் மீது விளையாடிக் கொண்டிருக்கிறது. உதயநிதி உண்ணாவிரத போராட்டம் என்று கூறுகிறார். எல்லாம் உங்கள் தாத்தாவை பார்த்தவர்கள் நாங்கள். ஆகையால் இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம். தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒரு இயக்கம் என்றால் அது திமுக தான்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் விவசாயிகள் போட்ட வழக்கை, சுயநலத்துக்காக திரும்ப பெற்றவர் கருணாநிதி. ராமநாதபுரத்தில் கச்சத்தீவு பற்றி வாய்கிழிய பேசுகிறாரே ஸ்டாலின். இலங்கைக்கு கச்சத் தீவை விட்டுக்கொடுத்தது யார்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டு நடுங்கிக் கொண்டு இருக்கிறார் - சி.வி.சண்முகம் விமர்சனம்
இன்றைக்கு கச்சத் தீவை மீட்பேன் என வாய்கிழிய பேசுகிறார் ஸ்டாலினி. கச்சத்தீவை தாரைவார்த்த பிறகு மூன்று முறை ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. ஆனால், கச்சத்தீவை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதவர்தான் இந்தக் கருணாநிதி. உங்களுக்கு எல்லாம் கச்சத்தீவு பற்றி பேசவே அருகதை கிடையாது என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.