புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாந்தலையைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(55). இவர் அதிமுக அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார்.
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு முன்னேற்பாடு பணிகளை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாந்தலையைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(55). இவர் அதிமுக அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வலது கரம் போல் திகழ்ந்தார். இந்நிலையில், கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகமும், சாம்பசிவமும் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு முன்னேற்பாடு பணிகளை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மேயர்.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!
அப்போது, காரில் இருந்து சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்வ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாம்பசிவத்தின் திடீர் உயிரிழப்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு