சென்னையில் சாம்பார் வாளியோட சுத்திவிட்டு கோவை பயணமா…? இணையத்தை ரவுண்டு கட்டும் #GoBackStalin

By manimegalai aFirst Published Nov 22, 2021, 8:37 AM IST
Highlights

முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

சென்னையில் வெள்ளம் போட்டு தாக்கிய போது நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கும் விசிட் அடித்து நேரில் ஆய்வு நடத்தினார்.

தற்போது மழை, வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல்வாதிகளும் அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இந் நிலையில முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக கோவைக்கு இன்று வருகிறார். 89 கோடி ரூபாயில் 120 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, 500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இவைதவிர 440 கோடியில் 23000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். திருப்பூரில் நாளை நடக்க உள்ள கொடிசியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் 2 நாள் கோவை பயணத்தை வெற்றிப்பயணமாக மாற்ற உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் நெட்டிசன்கள் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

இப்படித்தான் எதிர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டும் என்று இல்லை…இஷ்டம் போல நேற்றிரவு முதலே #GoBackStalin கருத்துகளை கலந்து கட்டி அடித்து இணையத்தை அதகளமாக்கி வருகின்றனர். கோவை வருகிறாரா? எதற்கு? என்று தெரியாதது போல் கேட்டு காமெடி செய்யும் டுவிட்டர் பதிவுகளும் அதிகம் வலம் வர ஆரம்பித்து இருக்கின்றன.

அவர் எதற்காக வருகிறார் என்று தெரியாமல் போடும் பதிவுகளுக்கு அளிக்கப்படும் பதிவுகளும் தெறிக்க விடுகின்றன. குறிப்பாக பாஜகவினர் பலரும் இஷ்டத்துக்கு ரவுண்டு கட்டி பதில் போட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகிறார் என்றும், சென்னையில் சாம்பார் வாளியுடன் வந்து மக்களை ஏமாற்றிவிட்டு இப்போது தேர்தலுக்காக கோவை மக்களை ஏமாற்ற வருபவரை கண்டிக்கும் என்றும் பாஜகவினர் பதிவை போட்டு வருகின்றனர்.

விடியாத அரசின் முதலமைச்சரே திரும்பி போ என்றும், மருதமலையில் அங்க பிரதட்சணம் செய்தாலும் கொங்கு மண்ணில் திமுக ஜெயிக்காது என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

1 லட்சம் பேர வரவேற்கணும்னு அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லிவிட்டு இப்போது கோவை மக்களே ஸ்டாலினை திரும்பி போ என்று டிரெண்ட் செய்கின்றனர்… 1 லட்சம் பேர் பிரயாணிக்காக வருகின்றனர், கொரோனாவை பரப்ப கோவையில் திரள்கின்றனர் என்று வரிந்து கட்டிக் கொண்டு டுவிட்டரில் அட்ராசிட்டி பண்ணி வருகின்றனர்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பயணம், அப்போது கரண்ட் கட் கன்பார்ம்… ஆனா எத்தனை முறைதான் இருக்கும் என்று தெரியவில்லை என்றும் உடன்பிறப்புகளை சூடேற்றி பதிவிட்டு வருகின்றனர் திமுக எதிர்ப்பாளர்கள்.

அப்படியே அப்பா கருணாநிதியை போல… முக்கிய பிரச்னைகளில் தமிழகம் தத்தளிக்கும் போது அதை திசைதிருப்ப வேறு ஏதேனும் ஒரு காரியத்தில் இறங்கிவிடுவார்.. அப்படித்தான் சென்னையில் தோனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று விமர்சித்து பதிவிட்டு இருக்கின்றனர்.

தொடரும் இது போன்ற பதிவுகளை பாஜகவினர் தான் திட்டமிட்டு பரப்புகின்றனர் என்றும், இந்த அரசு மக்களுக்கான அரசு என்றும் உடன்பிறப்புகளும், திமுக ஆதரவாளர்களும் பதிலடி தந்து வருகின்றனர். ஆனால் அந்த பதிவுகளுக்கும் கேப் விடாமல் பதில் பதிவு போட்டு திமுகவை அனைவரும் தாளித்து வருவது தனிக்கதை…!

click me!