'தேர்தலில் தோற்றுவிடுமோ என்ற பயம் மோடிக்கு இருக்கிறது' - காங்கிரஸ் கே.வீ. தங்கபாலு ஆவேசம் !

By manimegalai aFirst Published Nov 22, 2021, 7:39 AM IST
Highlights

தேர்தலில் தோற்றுவிடுமோ என்ற பயம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளதால் தான், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு குற்றஞ்சாட்டி உள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த விவசாயிகளை நினைவுகூரும் வகையில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. வீ. தங்கபாலு தலைமை தாங்கினார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய கே. வீ. தங்கபாலு, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

சட்ட மசோதாக்களுக்கு எதிராக போராடி பல விவசாயிகள் இறந்துள்ளனர். உத்தரபிரதேசம் உள்பட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தங்களது கட்சி தோல்வி அடைந்து விடும் என்ற பயத்திலேயே வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த அறிவிப்பு விவசாயிகள் நலனுக்காக அல்ல. இந்த அறிவிப்பாலும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறப்போவதில்லை. வேளாண் திருத்த சட்டங்களை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ரத்து செய்ய வேண்டும்.அதுதான் விவசாயிகளுக்கு செய்யும் கடமை ஆகும். பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையான சட்டத்தில் தண்டிக்க வேண்டும்.மேலும் இதுபோல் இனி நடக்காதவாறு தண்டனைகளை கடுமையாக்கப்பட வேண்டும்’  என்று கூறினார்.

 

click me!