திமுக ஆட்சிக்கு வந்தாலே ஆட்டோமெட்டிக்கா கத்தி கபடா வந்துவிடும்.. ஆளுங்கட்சியை போட்டு தாக்கும் பொன்.பொன்னார்.!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 7:24 AM IST
Highlights

திமுக செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் சுயநலம் இருக்கும் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாராணம். திமுக ஒரு ஆட்சியாளர்களின் கடமையில் இருந்து தவறுகிறது.

ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற நாவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். 

மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு மதுரை மாநகர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சியினரிடம் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்களைப் பெற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அம்மா உணவகத்தில் ஐய்யா படத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என்பதாலே மிகப்பெரிய நாடகத்தை முன்கூட்டியே திமுக நடத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- திமுக ஆட்சிக்கு வந்தாலே சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஸ்டாலினை விளாசும் டிடிவி.தினகரன்..!

திமுக செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் சுயநலம் இருக்கும் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாராணம். திமுக ஒரு ஆட்சியாளர்களின் கடமையில் இருந்து தவறுகிறது. ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற நாவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. திமுக ஆட்சியக்கு வந்தாலே கத்தி கபடா எல்லாம் சேர்ந்து வந்துவிடும் என்பார்கள். இதை தடுக்க வேண்டியது தமிழக அரசாங்கத்தின் கடமை என்றார்.

இதையும் படிங்க;- கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்..! 

இதையும் படிங்க;- Jai Bhim: ஜெய்பீம் படத்தை தடை செய்தே ஆக வேண்டும்.. வன்னியர்களுக்காக வரிந்து கட்டும் கிருஷ்ணசாமி.!

மேலும், பெட்ரோல், டீசல் விலையை தமிழகத்தில் குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லை. பாஜக இப்போதும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. விவசாய வருமானத்தை இரு மடங்காகப் பெருக்குவது, மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லிகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருந்தும் வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை என்றார்.

click me!