கோவை மக்களே உஷார்....! முதல்வர் வருகையால் கோயம்புத்தூரில் போக்குவரத்தில் "அதிரடி" மாற்றம் !

By manimegalai aFirst Published Nov 22, 2021, 6:35 AM IST
Highlights

முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையால் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் உஷாராக அதை பார்த்து பயணம் செய்யுங்கள் என்று கோவை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,இன்று மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு திங்கட்கிழமை, கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. எந்தெந்த சாலைகளில் பயணிக்க வேண்டும் மற்றும் கூடாது என்பது குறித்து கோவை மாநகர் காவல்துறை அறிக்கை மூலம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று காலை 6: 00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை. அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம் வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும். அவினாசி சாலையில் இருந்துவரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்கு செல்ல வேண்டும். அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எஸ். என். ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவஇந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லவேண்டும்.

திருச்சி சாலையில் இருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசுமருத்துவமனை, லங்காகார்னர்,கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும். பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கம் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில்நிலையம் வழியாக திருச்சி சாலைக்கு செல்லவேண்டும். அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக செல்ல அனுமதியில்லை.

மாற்று வழியாக அவினாசி சாலைக்கு செல்ல டிஐஜிஅலுவலகம் வந்து ரெட்பீல்ட் வழியாக புலியகுளம் சென்று இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி சாலையை சென்று அடையலாம். எல். ஐ. சி சாலையில் வாகனங்கள் செல்லகூடாது.மத்தியபேருந்து நிலையத்தில் இருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக்கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு வழியாகவும், ஆர். வி. ரவுண்டானா, மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமிமில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகருக்கு செல்லவேண்டும்.

அவனாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல். ஐ. சி வழியாக வராமல் லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்லவேண்டும்’ என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.கோவை மக்களே காவல் துறை அறிவித்துள்ள போக்குவரத்து மாற்றத்தை கவனித்து, பயணியுங்கள்.

 

click me!