அய்யோ அசிங்கம், ஆபாசம்... டெல்லிக்கு பறந்த காயத்திரி ரகுராம்.. ஒற்றை புகாரில் திமுகவினரை அலறவிட்ட சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2021, 10:47 AM IST
Highlights

இதேபோல ராஜலிங்கம் என்ற திமுக பொறுப்பாளர் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியினுடைய சமூகவலைதள பொறுப்பாளர் திரு.ஈஸ்வரன் ஆகியோரும் மிகவும் ஆபாசமாக பாஜக பெண்  தலைவர்களை அவதூறாக பேசிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து தன்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் சித்தரித்து இழிவுபடுத்தி வரும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக பெண் நிர்வாகி காயத்திரி ரகுராம் தேசிய மகளிர் ஆணையத்தின் புகார் அளித்துள்ளனர். திமுக பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜலிங்கம் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தும் தமிழக காவல்துறை அவர்களை கைது செய்யாமல் இருப்பது ஒருதலை பட்சமானது என்றும்  காயத்திரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவில் வாய்த்துடுக்காக பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் நபராக உள்ளார் காயத்ரி ரகுராம், இவர் அக்காட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராகவும் இருந்துவருகிறார். இவர் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்து இருந்தார். அதில், தான் கடந்த பொங்கல் பண்டிகையின்போது பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதாகவும், அப்போது மாட்டு வண்டியில் ஏறும் போது சறுக்கி தவறி விழுந்ததாகவும், அப்போது தனது மேலாடை விலகியதாகவும், அதை சிலர் ஆபாசமாக படம் எடுத்ததாகவும், தற்போது அந்த படத்தை திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவர் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும்,  ஜெயச்சந்திரனுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது, ஆனால் அவர்தொடர்ந்து அந்த வீடியோவை பரப்பிய அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார், 

இதையும் படியுங்கள்: யோகியை எதிர்த்து பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும்.. சல்மான் குர்ஷித் பயங்கர ஐடியா.  

இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என தெரிவித்த காயத்திரி உடனே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.  அப்போது அவருக்கு ஆதரவாக பாஜகவின் முன்னணித் தலைவர்கள் குரல் கொடுத்ததுடன், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது, தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் ஜெயேந்திரனை கைது செய்ய வேண்டும் என புகாரி வலியுறுத்தப்பட்டது, பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராமை தொடர்ந்து  ஆபாசமாக சித்தரித்து வரும் ஜெயச்சந்திரனை கைது செய்ய வேண்டுமென அப்போதும் வலியுறுத்தப்பட்டது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் காயத்ரி ரகுராம், திமுக ஆட்சியில் உள்ள நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் அல்லது கனிமொழி எம்பி ஆகியோர் கூட இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சரியமாக உள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என ஆவேசம் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  அதிகாரம் வந்துட்டா எதுவேணா பேசலாமா.? பொறுத்து பொறுத்து பார்த்து திமுகவை எகிறி அடித்த எடப்பாடி பழனிச்சாமி.

இதேபோல ராஜலிங்கம் என்ற திமுக பொறுப்பாளர் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியினுடைய சமூகவலைதள பொறுப்பாளர் திரு.ஈஸ்வரன் ஆகியோரும் மிகவும் ஆபாசமாக பாஜக பெண்  தலைவர்களை அவதூறாக பேசிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 
இந்நிலையில் காயத்திரி ரகுராம் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனால் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மாவை தமிழக பாஜக செயலாளர் சுமதி வெங்கடேஷ், கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்திரு ரகுராம் ஆகியோர் நேற்று சந்தித்தனர், அப்போது சுமதி வெங்கடேஷ் வாக்குவாதத்தின் போது காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும், காயத்திரு ரகுராமை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகிகள் மீது  புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தான் கொடுத்த புகாருக்கு இதுவரை தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியில்லாமல் தேசிய மகளிர் ஆணையத்தை கதவு தட்டும் நிலைமைக்கு வந்திருக்கிறோம், எங்களின் புகார் பொற்றுக் கொண்ட தேசிய மகளீர் ஆணைய தலைவர் ரேகா சர்மா அவர்கள் தமிழக காவல்துறைக்கு இது குறித்து தகவல் அனுப்பப்படும் என்றும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் என கூறினார். 
 

click me!