பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் அதன் மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராம்.
இதையடுத்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை, அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விட்டுள்ளார்.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கவர்னர் ஐயா, உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது.. ஹனிட்ராப் மன்னன், விமான அவசர கதவு திறப்பாளர் மன்னன், ரஃபேல் வாட்ச் மன்னன் தவறுகளை எத்தனை முறை திசை திருப்பி காப்பாற்ற வேண்டும்? தொலைக்காட்சி நேர்காணல்களில் அவர் உங்களை குற்றம் சாட்டிவிட்டு காட்டி காட்டுகிறார் கொடுக்கிறார் என்று பதிவிட்டார்.
மற்றொரு பதிவில், 2017ல் இதே தேசிய குற்றத்திற்காக ஒரு சாமானியர் கைது செய்யப்பட்டார். ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அருகில் அமர்ந்திருந்தபோது, எச்சரிக்கவில்லையா? அவர் மயக்கத்தில் இருந்தாரா இல்லை விளையாடிக் கொண்டிருந்தார்கள்? கவர்னரைப் போல தேஜஸ்வியும் அண்ணாமலையால் சிக்கலில் மாட்டிக்கொண்டாரா? என்று விமான விவகாரத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கினார்.
கவர்னர் ஐயா, உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது.. ஹனிட்ராப் மன்னன், விமான அவசர கதவு திறப்பாளர் மன்னன், ரஃபேல் வாட்ச் மன்னன் தவறுகளை எத்தனை முறை திசை திருப்பி காப்பாற்ற வேண்டும்?
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayatri_Raguram)அடுத்த பதிவில், அண்ணாமலை சவாலுக்கு நீங்கள் தயாரா? என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் இன்று தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..6 கோடி இன்சூரன்ஸ் பணம்! அரசு ஊழியரின் விபத்து நாடகம்.. துணிவுடன் தூக்கிய போலீஸ்! வேற மாறி சம்பவமா இருக்கே!