இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி… இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Jan 18, 2023, 4:48 PM IST
Highlights

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். 

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் பரப்புவாதம் தலை தூக்கி நிற்கிறது. நாட்டையே தலைகீழாக திருப்ப முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தி தங்களது சுயநலக் கொள்கையை பயன்படுத்தி மக்களை பிரிக்க நினைக்கின்றனர். நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வர பாஜக முயலுகிறது.

இதையும் படிங்க: ஆளுநரின் முற்றுப்புள்ளி வரவேற்கதக்கது.! இனியாவது அரசின் செயல்பாட்டில் மூக்கை நுழைக்காமல் இருக்கனும்- காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை. 2024 ஆம் ஆண்டு சட்டசபையோடு சேர்ந்து தேர்தல் வந்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று குறுகிய ஆசையை அதிமுக வைத்துள்ளது. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது இதை ஏற்கவில்லை. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதிமுக கொள்கைக்கு இது எதிரானது. ஒரு கட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கை. அதை கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி செய்து வருகிறது.

இதையும் படிங்க: ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..!

மதவாததிற்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும், தமிழர்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டாம், ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் பா.ஜீவானந்தத்தின் 60ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை காசிமேட்டில் உள்ள நினைவிடத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

click me!