ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..!

By vinoth kumar  |  First Published Jan 18, 2023, 2:21 PM IST

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 4ம் தேதி காலமானார். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஈவெரா திருமகன் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். 

Latest Videos

எந்த தேதியில் தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அதே நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில், இன்று பிற்பகல் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

click me!